உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஸ்ரீதேவி புற்று கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

ஸ்ரீதேவி புற்று கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

செம்பாக்கம், சேலையூரை அடுத்த மகாலட்சுமி நகரில், 49 ஆண்டுகள் பழமையான, ஸ்ரீதேவி கருமாரியம்மன் புற்றுக்கோவில் உள்ளது.சுயம்புவாக உருவான புற்றுக்கோவிலை, ஆரம்பத்தில் அப்பகுதியை சேர்ந்த மாரி மேஸ்திரி உள்ளிட்ட ஊர்மக்கள் வழிபடத் துவங்கினர்.அதன்பின், சிறிய அளவில் கோவில் கட்டி, ஸ்ரீதேவி கருமாரியம்மன் என பெயர் சூட்டி வழிபட்டனர். கோவிலில், 2012, அக்., 28ல் கும்பாபிஷேகம் நடந்தது.கோவிலுக்கு வந்து அம்மனை மனமுருகி வழிபட்டால், வேண்டியது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கோவில் புனரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, நாளை காலை, 8:45 மணி முதல் 9:30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.விழாவில், பக்தர்கள் அதிகம் பங்கேற்பர் என்பதால், அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி