வீட்டில் தீ மடிக்கணினி நாசம்
வானகரம், போரூர் அடுத்த, செட்டியார் அகரம் விஜயலட்சுமி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 48; தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பணிபுரிகிறார். இவர், பணி நிமித்தமாக குஜராத் மாநிலம் சென்றுள்ளார். அவரது மனைவி திருமகள், 43, மகன், மகள் ஆகியோர் வீட்டில் இருந்த நிலையில், நேற்று காலை படுக்கை அறையில் தீ பிடித்தது. மெத்தை, மடிக்கணினி உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவு காரணமாக தீ பற்றியிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.