விமானம் மீது மீண்டும் லேசர் ஒளி
சென்னை, புனேவில் இருந்து சென்னைக்கு 178 பயணியருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று அதிகாலை 1:10 மணிக்கு வந்து கொண்டிருந்தது. விமானம் ரன்வே பகுதியில் தரையிறங்க முயன்ற போது, வெள்ளை நிற லேசர் ஒளி விமானத்தின் மீது அடிக்கப்பட்டுள்ளது. விமானி உடனடியாக விமான நிலைய தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். எந்த பிரச்சனையும் இல்லாமல் விமானம் 1:20 மணிக்கு பத்திரமாக சென்னையில் தரையிறங்கியது. விமான நிறுவனம் வாயிலாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடந்த இரண்டு வாரத்தில், துபாய் விமானம் மீது இரண்டு முறையும், புனே விமானம் மீது ஒரு முறையும் என, மூன்று முறை லேசர் ஒளி பாய்ச்சிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன் பிண்ணனியில் உள்ளவர்கள் குறித்து கண்டுப்பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், விமான போக்குவரத்துக்கு பெரிய பாதிப்பு ஏற்படும் என, வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.***