உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காது கேளாதோருக்கு புது பாடப்பிரிவு துவக்கம்

காது கேளாதோருக்கு புது பாடப்பிரிவு துவக்கம்

சென்னை:செவித்திறன் குறைந்த வாய் பேச இயலாத மாணவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லுாரியில், புதிய பாடப் பிரிவு துவங்கப்படவுள்ளது.இதற்காக அரசு, 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளது. உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிக்கை:பற்றவைத்தல், மின்னணுவியல் பாகங்களைத் தொகுத்தல், மின்னணுவியல் பலகைகளை பரிசோதித்தல் ஆகிய திறன்களில் பயிற்சி அளிக்கும் வகையில், இரண்டு புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்படும். பயிற்சி காலம் ஆறு மாதங்கள். இதில், 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தகுதியான மாணவர்கள் சேரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ