உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எல்.ஐ.சி.,யில் புதிய திட்டம் அம்ரித் பால் அறிமுகம்

எல்.ஐ.சி.,யில் புதிய திட்டம் அம்ரித் பால் அறிமுகம்

சென்னை, பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி., தனி நபர் சேமிப்பு, ஆயுள் காப்பீட்டு திட்டமான 'அம்ரித் பால்' என்ற புதிய திட்டத்தை துவங்கியுள்ளது. இதை, மத்திய நிதித்துறை செயலர் விவேக் ஜோஷி அறிமுகப்படுத்தினார்.நேற்று முதல் அமலுக்கு வந்துள்ள இத்திட்டம், குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக, போதுமான தொகையை சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இப்பாலிசி, 30 நாட்கள் முதல் அதிகபட்சமாக, 13 ஆண்டுகள் வரையுள்ள குழந்தைகளுக்கு ஏற்ற திட்டமாகும்.குழந்தைகளின் 18 - 25 வயது வரையுள்ள காலத்தில் முதிர்வடையும். இதில், 5, 6, மற்றும் 7 ஆண்டுகள் குறுகிய பிரீமியம் செலுத்தும் வசதியும் உண்டு.குறைந்தபட்ச காப்பீட்டு தொகை, 2 லட்சம் ரூபாய்; அதிகபட்ச காப்பீட்டு தொகைக்கு வரம்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.பாலிசி துவங்கப்பட்ட காலம் முதல் முதிர்வு காலம் வரை, 1,000 ரூபாய் அடிப்படை தொகைக்கு 80 ரூபாய் வீதம், உத்திரவாதமான தொகையாக, பாலிசி அமலில் உள்ள காலத்தில், கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டம், பங்கு சந்தை சாராதது என, எல்.ஐ.சி., சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை