உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சிறுமி பலாத்காரம் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

செங்கல்பட்டு, மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஐந்தரை வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள ஏசு, 27, என்பவர் வீட்டிற்கு சென்று விளையாடுவது வழக்கம்.கடந்த 2018 மார்ச் 11ம் தேதி, அங்கு சென்று விளையாடிய சிறுமியை, ஏசு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து விசாரித்த மடிப்பாக்கம் மகளிர் போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடந்தது. விசாரணையில், ஏசு மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக, 4 லட்சம் ரூபாய் வழங்க, அரசுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி