உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பாம்பு கடித்து சிறுமி பலி

பாம்பு கடித்து சிறுமி பலி

மதுராந்தகம், மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பவானி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வினோத்குமார், 38. இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு, இவரது குடிசை வீட்டில் அனைவரும் துாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அவரது இளைய மகள் அக் ஷயா, 6, என்பவரை பாம்பு கடித்துள்ளது.சிறுமியை மீட்ட பெற்றோர், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ