நாட்டு வெடிகுண்டு வீச்சு: வாலிபர் படுகாயம்
கடம்பத்துார்: கடம்பத்துார் ஒன்றியம் சிற்றம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சேது, 26. இவர், நேற்று மாலை 6:00 மணிக்கு வீட்டின் அருகே நின்றபோது, 'மாருதி ஸ்விப்ட்' காரில் வந்த மர்ம நபர்கள், நாட்டு வெடிகுண்டு வீசி தப்பிச் சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சேது, திருவள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடம்பத்துார் போலீசார் விசாரணையில், 'டாஸ்மாக்' கடையில் ஏற்பட்ட பிரச்னையில், சேது தரப்பினர், கிளாம்பாக்கத்தில் வசிக்கும் முகேஷ் மற்றும் லோகேஷ் ஆகிய இருவரையும் வெட்டினர். இதில், இருவரும் படுகாயமடைந்தனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக, இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என தெரிய வந்தது.