மதுபாட்டில் வயிற்றில் குத்தி லாரி ஓட்டுனர் பரிதாப பலி
மணலி:பெரம்பலுார் மாவட்டம், அடக்கம்பட்டியைச் சேர்ந்தவர் தாணு, 31; ராயபுரத்தில் உள்ள எஸ்.வி.கே., டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.நேற்று மதியம், மணலிபுதுநகர் அருகே டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு, மதுபான பாட்டில் ஒன்றை வாங்கி, இடுப்பில் சொருகிக் கொண்டு வந்துள்ளார்.பொன்னேரி நெடுஞ்சாலை, ஆண்டார்குப்பம் சந்திப்பு - எலந்தனுார் அணுகு சாலை நடந்து சென்றபோது, போதையில் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இடுப்பில் சொருகி வைத்திருந்த மதுபாட்டில் உடைந்ததுடன், கண்ணாடி துண்டுகள் வயிற்றில் குத்தியது. பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஆம்புலன்ஸ் வாயிலாக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே தாணு பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து, மணலி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.