உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அரசு பஸ் மோதி விபத்து லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

அரசு பஸ் மோதி விபத்து லாரி ஓட்டுநர் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதுார்: வியாசர்பாடியைச் சேர்ந்தவர் தேவராஜ், 51; லாரி ஓட்டுநர். இவர், நேற்று முன் தினம் மாலை, கொடுங்கையூரில் இருந்து, மர பலகைகளை ஏற்றி கொண்டு சுங்குவார்சத்திரம் சென்றார். சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், இருங்காட்டுக்கோட்டை அடுத்த, பென்னுார் துணை மின் நிலையம் அருகே சென்றபோது, லாரி டயர் பஞ்சரானது. இதையடுத்து, தேவராஜ் வாகனத்தில் இருந்து இறங்கி, வாகனத்தை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முற்படும் போது, அதே திசையில் சென்னையில் இருந்து வேலுார் நோக்கி சென்ற அரசு பேருந்து, தேவராஜ் மீது மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரிக் கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !