உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வழி தவறிய மாற்றுத்திறன் மாணவர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

வழி தவறிய மாற்றுத்திறன் மாணவர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு

ஆதம்பாக்கம் :தரமணி, எம்.ஜி.ஆர்., நகர், அண்ணா தெருவை சேர்ந்தவர் ராம்குமார், 41. இவர், வேளச்சேரியில் உள்ள துணிக்கடையில் விற்பனையாளராக பணியாற்றுகிறார்.நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து கடைக்கு வெளியே வந்தபோது, ஆதம்பாக்கம் பகுதியில், 12 வயதுள்ள மாற்றுத்திறன் மாணவன், வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தான்.சிறுவனை மீட்ட ராம்குமார், ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆதம்பாக்கம் போலீசார் மாணவனின் பள்ளி பையை சோதனையிட்டனர். அதில் விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.இதையடுத்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், குழந்தைகள் நல கமிட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.காவல் நிலையம் வந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம், மாணவன் ஒப்படைக்கப்பட்டு, கொட்டிவாக்கத்தில் உள்ள சிறார் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.இந்நிலையில், விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லையில், மாற்றுத்திறன் பள்ளி மாணவனை காணவில்லை என, பெற்றோர் புகார் அளித்திருப்பதாக, ஆதம்பாக்கம் சோலீசாருக்கு தகவல் கிடைத்தது.குழந்தைகள் நல அலுவலர் விசாரித்து, நெற்குன்றத்தைச் சேர்ந்த சிறுவனின் பெற்றோரை வரவழைத்து, சட்ட வழிகாட்டுதலின்படி, நேற்று மாணவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி