உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்து முனையமாக மாறிய மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பு 

விபத்து முனையமாக மாறிய மாதவரம் நெடுஞ்சாலை சந்திப்பு 

மாதவரம், மாதவரம் சந்திப்பில் இருந்து சின்ன ரவுண்டானா 200 அடி சாலை வரை செல்லும் நெடுஞ்சாலையில், 'டோரண்ட்' நிறுவன 'காஸ்' குழாய் பதிக்கும் பணிகள் நடக்கின்றன.இந்த நிறுவனத்தினர்,நெடுஞ்சாலையில் இயந்திரங்கள் மூலமாக பள்ளம் தோண்டி குழாய் பதித்த பின், அதை முறையாக மூடாமல், பெயரளவுக்கு சிமென்ட் கலவை அல்லது மணல் போட்டு மூடி செல்கின்றனர்.ஓரிரு நாளிலேயே அவை காணாமல் போய்விடுகிறது. இதில், பல இடங்களில் குழாய் பதித்த இடம் பள்ளமாகி சேறும் சகதியுமாக மாறி இருக்கிறது. குறிப்பாக மூலக்கடையில் இருந்து மாதவரம் சந்திப்பு வரை சாலை படுமோசமாக மாறியுள்ளது.சமீபத்தில் அவ்வப்போது மழையும் பெய்வதால், சாலையில் நடக்ககூட முடியாத அளவுக்கு மாறி, விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது. இதனருகே புழல் சிறை, மாதவரம் பேருந்து நிலையமும், பல வணிக வளாகங்களும் உள்ளன.பள்ளி மற்றும் கல்லுாரி செல்வோர் அதிகளவு பயன்படுத்தும் மாதவரம்சந்திப்பு, டோரண்ட் காஸ் குழாய் பதிப்பு பணியால் நெரிசல் மற்றும் விபத்து முனையமாக மாறியுள்ளது. உயிர்பலி ஏற்படும்முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை