உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளி முதலிடம்

அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளி முதலிடம்

சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டியில், மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளி முதலிடத்தை வென்றது. எஸ்.ஆர்.எம்., வள்ளி யம்மை பொறியியல் கல்லுாரி சார்பில், அகில இந்திய பூப்பந்தாட்ட போட்டி, நேற்று முன்தினம் துவங்கி, நேற்று மாலை நிறைவடைந்தது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடந்த போட்டியில், தமிழகம், ஆந்திரா உட்பட பல மாநிலங்களில் இருந்து, 13 பள்ளிகளைச் சேர்ந்த மாணவியர் அணிகள் பங்கேற்றன. 'லீக்' மற்றும் 'சூப்பர் லீக்' முறையில் போட்டிகள் நடந்தன. நேற்று நடந்த 'சூப்பர் லீக்' ஆட்டத்தில், பல்லாவரம், செயின்ட் தெரசா பள்ளி, 35 - 20, 35 - 31 என்ற கணக்கில் சேலம், இளம்பிள்ளை அரசு பள்ளியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில், மதுரை ஓ.சி.பி.எம்., பள்ளி, 35 - 30, 35 - 17 என்ற கணக்கில் சென்னை அண்ணா நகர் ஜெசி மோசஸ் பள்ளியை வீழ்த்தியது. அனைத்து போட்டிகள் முடிவில், புள்ளிகள் அடிப்படையில், மதுரை தல்லாகுளம் ஓ.சி.பி.எம்., பள்ளி முதலிடத்தையும், பல்லாவரம் செயின்ட் தெரசா பள்ளி இரண்டாமிடத்தையும் கைப்பற்றின. சென்னை அண்ணா நகர் சி.எஸ்.ஐ., ஜெசி மோசஸ் மற்றும் சேலம் இளம்பிள்ளை அரசு பள்ளி ஆகிய இரு அணிகளும் மூன்றாம் இடத்தை பகிர்ந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை