உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாற்றுத்திறனாளிகளாக நடித்து பிச்சை கேட்ட மஹா., நபர்கள் கைது

மாற்றுத்திறனாளிகளாக நடித்து பிச்சை கேட்ட மஹா., நபர்கள் கைது

சேலையூர், சேலையூரில், மாற்றுத்திறனாளிகளாக நடித்து, தாம்பரம் - வேளச்சேரி சாலையில் பிச்சை கேட்டு இடையூறு செய்த, மஹாராஷ்டிரா பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் - வேளச்சேரி சாலையில், மகாலட்சுமி நகர் சிக்னல் அருகே, வட மாநிலத்தைச் சேர்ந்த இருவர் மாற்றுத் திறனாளிகள் போல் நடித்து, சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை கேட்டு தொந்தரவு செய்வதாக, சேலையூர் போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, நேற்று, வட மாநில பெண் உட்பட இருவரை பிடித்து விசாரித்தனர். அதில், மஹாராஷ்டிராவைச் சேர்ந்த நிதின் பபன் பவார், 21, தியா பவார், 20. என்பதும், மாற்றுத் திறனாளிகள் போல் நடித்து, மோசடியாக யாசகம் பெற்று வந்ததும் விசாரணையில் உறுதியானது. இதற்காக, சிறப்பு பயிற்சி பெற்று, சென்னை முழுதும் இதேபோல் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சேலையூர் போலீசார் இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ