குப்பை கழிவுகளால் முக்கிய சந்திப்பு நாஸ்தி
திருவொற்றியூர் 5வது வார்டு, மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை அருகே, நான்குமுனை சந்திப்பில் குப்பை தொட்டி வைக்கப்பட்டிருந்தது. திடீரென குப்பை தொட்டி அகற்றப்பட்டு விட்டது. இருப்பினும், குப்பை தொட்டி இருந்த நான்கு முனை சந்திப்பிலேயே, சிலர் குப்பை வீசி செல்கின்றனர்.தவிர, அங்கு தொட்டியில்லாத காரணத்தால், தண்டவாள ஓரங்களில் குப்பையை மூட்டையாக கட்டி வீசுகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு நிலவுகிறது.சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவன அதிகாரிகள் கவனித்து, மாணிக்கம் நகர் - நான்கு முனை சந்திப்பில், ஏற்கனவே குப்பை தொட்டி இருந்த இடத்தில், மீண்டும் குப்பை தொட்டி வைக்க வேண்டும்.- கணேஷ், திருவொற்றியூர்.