உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெரும்பாக்கம் ரெப்கோ மேடவாக்கத்திற்கு மாற்றம்

பெரும்பாக்கம் ரெப்கோ மேடவாக்கத்திற்கு மாற்றம்

சென்னை:இந்திய அரசு நிறுவனமான ரெப்கோ வங்கி, 108 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. ரெப்கோ வங்கியின் பெரும்பாக்கம் கிளை, 2015ல் துவக்கப்பட்டு தற்போது, 58 கோடி ரூபாய் மொத்த வணிகத்துடன், சிறப்பாக செயல்பட்டு வருகிறது.இந்த கிளை, வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப, எண்: 5/577 வேளச்சேரி பிரதான சாலை, மேடவாக்கம் - 100 முகவரியில் உள்ள புதிய வளாகத்திற்கு, மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இம்மாதம், 19ம் தேதி நடந்தது. சிறப்பு விருந்தினராக வங்கியின் தலைவர் சந்தானம், வங்கியின் மேலாண் இயக்குனர் பொறுப்பு கோகுல் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ