மேலும் செய்திகள்
பொது கொடுக்கல் வாங்கல் தகராறில் அடிதடி
29-May-2025
வடபழனி:வியாசர்பாடியைச் சேர்ந்தவர் அபிமன்யு, 20; பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் நான்காம் ஆண்டு எல்.எல்.பி., பயில்கிறார்.நேற்று முன்தினம் இரவு, தன் பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடி, வடபழனி ஆற்காடு சாலை, தோசி கார்டன் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போது, மது போதையில் மூன்று பேர், கார் ஓட்டுநர்களிடம் தகராறு செய்துக் கொண்டிருந்தனர். அபிமன்யு மற்றும் அவரது நண்பர்கள், அந்த மூவரை தட்டிக்கேட்டனர். அதில் ஒருவர், கீழே கிடந்த கல்லை எடுத்து வீசியதில், அபிமன்யு தலையின் இடது பக்கத்தில் ரத்த காயம் ஏற்பட்டது. நண்பர்கள் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்து வடபழனி போலீசார் வரவே, இருவர் தப்பிச்செல்ல கல்லால் அடித்தவர் மட்டும் பிடிபட்டார்.விசாரணையில், பிடிபட்ட நபர், திரும்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் முகமது, 26, என்பது தெரியவந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.
29-May-2025