மேலும் செய்திகள்
தொடர் செயின் பறிப்பு சென்னை இளைஞர் கைது
27-May-2025
சென்னை,பெண்ணை தாக்கி, 5 சவரன் செயினை பறித்தவர் கைது செய்யப்பட்டார்.தி.நகர், டாக்டர் தாமஸ் சாலையைச் சேர்ந்தவர் நிஷாந்தி, 32. இவர், 20ம் தேதி காலை வீட்டிற்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு அறிமுகமான மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பேபி ராஜா, 30, என்பவர், கன்னத்தில் தாக்கி, 5.5 சவரன் செயினை பறித்து தப்பிச் சென்றார். இது குறித்த புகாரையடுத்து, தேனாம்பேட்டை போலீசார் விசாரித்து, பேபி ராஜாவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். அவரிடமிருந்து, 5.5 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பேபி ராஜா மீது, 11 வழக்குகள் உள்ளன.
27-May-2025