உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியை காட்டி மிரட்டி கார் பறிக்க முயன்றோர் கைது

கத்தியை காட்டி மிரட்டி கார் பறிக்க முயன்றோர் கைது

தரமணி, பெருங்குடி, சி.பி.ஐ., காலனியை சேர்ந்தவர் ஆதித்யா, 21. இவர், 15ம் தேதி அதிகாலை, நண்பர்களை பார்த்துவிட்டு, காரில் வீடு நோக்கி புறப்பட்டார்.தரமணி அருகே சென்றபோது, ஆறு பேர் காரை வழிமறித்து, ஆதித்யாவிடம் கத்தியை காட்டி, மொபைல் போன், கார் சாவியை கேட்டு மிரட்டினர். ஆதித்யா சத்தம் போட்டதும், சற்று தொலைவில் நின்றிருந்த மக்கள் ஓடி வந்தனர். அதற்குள், அந்த ஆறு பேரும் தப்பினர்.புகாரின்படி, தரமணி போலீசார் விசாரணையில், பெருங்குடியை சேர்ந்த முகேஷ், 20, ஸ்ரீகார்ந், 21, சங்கர், 20, மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட மூன்று சிறுவர்கள், இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.நேற்று, ஆறு பேரையும் பிடித்த போலீசார், மூன்று பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சிறுவர்களை, சிறார் நீதிகுழுமத்தில் ஆஜர்படுத்தி, சிறார் சீர்திருத்த மையத்தில் சேர்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ