உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆவின் ஊழியரிடம் திருட முயன்றவர் கைது

ஆவின் ஊழியரிடம் திருட முயன்றவர் கைது

தண்டையார்பேட்டை, திருநெல்வேலி, பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் உமர்முக்தர், 39. இவர், தண்டையார்பேட்டையில் உள்ள 'ஆவின்' பால் பூத்தில் சேல்ஸ்மேனாக பணிபுரிகிறார்.இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, தண்டையார்பேட்டை, மணிக்கூண்டு பேருந்து நிறுத்தத்தில் படுத்திருந்தபோது, அங்கு பைக்கில் வந்த மூவர், உமர்முக்தரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்த மணிபர்ஸை திருட முயன்றனர். அவர் சுதாரித்து கத்தவே, மூவரும் பைக்கில் ஏறி தப்பினர்.தண்டையார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய சிவா, 20, மண்ணடியைச் சேர்ந்த மணிகண்டன், 35, ஆகிய இருவரை கைது செய்தனர். தலைமறைவான நபரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ