மேலும் செய்திகள்
கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்து கொலை
25-Oct-2024
சென்னை:ராயபுரம், செட்டி தோட்டம் பகுதி நடைபாதையில், அடையாளம் தெரியாத நபர் தலையில் அடிபட்டு இறந்து கிடப்பதாக, ராயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.இதில், இறந்தது காசிமேடு, புதுமனைக்குப்பம், முதலாவது தெருவைச் சேர்ந்த மைதினுதீன், 55, என தெரிந்தது.இதையடுத்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மைதினுதீன் அடித்துக் கொலை செய்யப்பட்டதும், ராயபுரம், கிழக்கு மாதா கோவில் தெரு நடைபாதையில் வசிக்கும் முனுசாமி, 48, என்பவர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.மேலும் விசாரணையில், அப்பகுதியிலுள்ள கறிக்கடை ஒன்றில் பணிபுரியும் முனுசாமியும், மைதினுதீனும் நண்பர்கள். இருவரும் ஒன்றாக சேர்ந்து மதுகுடிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர். வழக்கம் போல், நேற்று முன்தினம் நள்ளிரவு முனுசாமி, மது குடிப்பதற்காக மைதினுதீடம் 10 ரூபாய் கேட்டுள்ளார். அவர், பணம் இல்லை என மறுத்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த முனுசாமி, அவரிடம் வாக்குவாதம் செய்து, ஆத்திரத்தில் அருகிலிருந்த உருட்டுக்கட்டையால், மைதினுதீன் தலையில் பயங்கரமாக தாக்கி விட்டு தப்பியுள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே மைதினுதீன் உயிரிழந்தது தெரிந்தது.இதையடுத்து முனுசாமியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
25-Oct-2024