மேலும் செய்திகள்
மாமூல் வசூலிக்கும் 'சார்' யாரு?
10-Nov-2025
சென்னை: கடைக்குள் புகுந்து, மொபைல் போன் திருடிய நபர் கைது செய்யப்பட்டார். கோவிலம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ், 36. இவர், தேனாம்பேட்டை, டாக்டர் தாமஸ் சாலையில், மொபைல் போன் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மாலையில், கடையை திறந்து வைத்தபடி, அருகே இருந்த ஹோட்டலில் தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார். பத்து நிமிடத்திற்குள் கடைக்கு திரும்பியபோது, உள்ளே இருந்து ஒருவர் ஓட முயன்றுள்ளார். அவரை பிடித்து 'எதற்காக கடைக்குள் நுழைந்தீர்கள்' எனக் கேட்டுள்ளார். அப்போது, 'பழைய மொபைல் போன் வாங்க வந்தேன்' எனக் கூறியபடி தப்பினார். இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரித்தனர். இதில், திருட்டில் ஈடுபட்டது தி.நகரைச் சேர்ந்த ஆனந்த், 25, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், கடையில் இருந்து திருடப்பட்ட மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.
10-Nov-2025