உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழில் உரிமம் பெற்று தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்தவர் கைது

தொழில் உரிமம் பெற்று தருவதாக ரூ.16 லட்சம் மோசடி செய்தவர் கைது

அசோக் நகர் :தொழில் துவங்க உரிமம் பெற்று தருவதாக, 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை, போலீசார் கைது செய்தனர். சென்னை அசோக் நகர், 48வது அவென்யூவை சேர்ந்தவர் கண்ணன், 53. இவருக்கு, செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கத்தை அடுத்த காயப்பாக்கத்தில் விளை நிலம் உள்ளது. கண்ணனுக்கு, 2017ம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் என்பவர் அறிமுகமானார். 'நான் பால் பண்ணை நடத்தி வருகிறேன். உங்கள் இடத்தில் பால் பதப்படுத்தும் நிறுவனம் துவங்கினால் நல்ல லாபம் கிடைக்கும்' என, ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய கண்ணன், புதிதாக தொழில் துவங்க, அரசிடம் அனுமதி மற்றும் உரிமம் பெற, ராஜேஷ் கண்ணனிடம், 16 லட்சம் ரூபாய் அளித்தார். பணத்தை பெற்ற ராஜேஷ் கண்ணன், உரிமம் பெற்று தராமல் ஏமாற்றி வந்தார். அசோக் நகர் காவல் நிலையத்தில், கண்ணன் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, முகப்பேரை சேர்ந்த ராஜேஷ் கண்ணன், 48 என்பவரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை