உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தங்கத்தில் முதலீடு ஆசைகாட்டி ரூ.58 லட்சம் மோசடி செய்தவர் கைது

தங்கத்தில் முதலீடு ஆசைகாட்டி ரூ.58 லட்சம் மோசடி செய்தவர் கைது

ஆவடி, அயனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் லலிதா, 42. இவரது மகன் யஷ்வந்த். இவர் வாயிலாக, தேனாம்பேட்டையைச் சேர்ந்த குங்குமபிரபு, 32, அவரது சகோதரர்கள் ஹரிஸ், 30, அங்கு பிரகாஷ், 34, அங்குலட்சுமி, 53, ஆகியோர் அறிமுகமாகினர்.சவுகார்பேட்டையில், 'திருமலா ஏஜன்சி' என்கிற நிறுவனத்தை நடத்தி வருவதாகவும், அதன் வாயிலாக தங்கத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் எனவும், நால்வரும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.அதை நம்பி, கடந்த 2024ம் ஆண்டு, ரொக்கமாகவும், வங்கி கணக்கிலும் மொத்தமாக, 58.25 லட்சம் ரூபாய் வரை, லலிதா கொடுத்துள்ளார். பணத்தை பெற்ற நால்வரும், லலிதாவை ஏமாற்றியுள்ளனர்.இது குறித்து, ஆவடி மத்திய குற்றப்பிரிவில் லலிதா புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, கோயம்புத்துாரில் பதுங்கியிருந்த குங்குமபிரபுவை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை