உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தவர் கைது

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்தவர் கைது

அரும்பாக்கம்,அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பேத்கர் மைதானத்தில், கடந்த 2024 செப்., 1ம் தேதி, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அங்கு கஞ்சாவுடன் நின்றிருந்த, சூளைமேட்டை சேர்ந்த கார்த்திக், 28, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.300 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு, இரண்டாவது கூடுதல் தனி நீதிபதியின் முன் விசாரணையில் இருந்த போது, கார்த்திக் ஜாமினில் வெளியே வந்தார்.அதன்பின், வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் முறையாக ஆஜராகாமல் இருந்த கார்த்திக் மீது, 2025 மார்ச் 21ம் தேதி, நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்தது.இரண்டு மாதமாக போலீசுக்கு தண்ணி காட்டிய கார்த்திக்கை, போலீசார் நேற்று கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ