உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 188 கிராம் தங்க நகையுடன் மே.வங்கம் பறந்தோர் கைது

188 கிராம் தங்க நகையுடன் மே.வங்கம் பறந்தோர் கைது

சென்னை, சூளைமேடு, சிவானந்தா சாலையைச் சேர்ந்தவர் சையது வாசுதீன் கில்ஜி, 39. இவர், தி.நகர் மூசா தெருவில், வாஜித் ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார்.கடந்த 18ம் தேதியன்று ஊழியர்களான சானி, 40, ஆரிப் ரஹ்மான், 25, ஆகிய இருவரிடம், 188 கிராம் தங்க நகையை, 'பாலீஷ்' போடுவதற்காக கொடுத்துவிட்டு, வீட்டிற்குச் சென்றுள்ளார்.திரும்ப கடைக்கு வந்தபோது, நகையுடன் ஊழியர்கள் இருவரும் மாயமானது தெரிய வந்தது. இது குறித்து சையது வாசுதீன் கில்ஜி, மாம்பலம் போலீசில் புகாரளித்தார்.விசாரணையில், ஊழியர்கள் இருவரும் நகையை திருடிக் கொண்டு, சொந்த ஊரான மேற்கு வங்க மாநிலம், சோட்டாபஜார் பகுதியில் பதுங்கியிருப்பது தெரிந்தது.பின், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று, இருவரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். நேற்று இருவரையும், நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 183 கிராம் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ