ஆட்டோவை வழிப்பறி செய்த நபர் கைது
மாம்பலம் மேற்கு மாம்பலம், ஜோதிராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார், 40; ஆட்டோ ஓட்டுநர்.நேற்று முன்தினம் இரவு, தி.நகர் மேட்லி சுரங்கப்பாதை அருகே, ஆட்டோவில் சென்றார். அவருக்கு அறிமுகமான பாலமுருகன் என்பவர், ஆட்டோவை நிறுத்தி, தகராறு செய்தார்.பின், கணேஷ்குமாரிடம் 2,700 ரூபாயை பறித்து, அவரை கீழே தள்ளி, ஆட்டோ ஓட்டிச்சென்றார்.மாம்பலம் போலீசார் விசாரித்து, கூடுவாஞ்சேரி, வள்ளலார் நகரைச் சேர்ந்த பாலமுருகன், 38, என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 2,700 ரூபாய் மற்றும் ஆட்டோ மீட்கப்பட்டது.