உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலை

திரு.வி.க நகர்:புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, வயிற்று வலி சிகிச்சைக்காக பெற்றோருடன், பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.சிறுமியின் தாய், செம்பியம் மகளிர் போலீசில் புகார் அளித்தார். சிறுமியிடம் போலீசார் விசாரித்தனர்.கடலுாரை சேர்ந்த சதீஷ், 25, என்ற வாலிபருடன், சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, கொரட்டூரில் உள்ள அறைக்கு அழைத்து சென்று, ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். இதனால், சிறுமி கர்ப்பமாகி உள்ளார். போக்சோ பிரிவின்கீழ் வழக்கு பதிந்து, வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை