மேலும் செய்திகள்
கம்பி கட்டும் தொழிலாளி தவறி விழுந்து பலி
10-Nov-2024
கொடுங்கையூர், கொடுங்கையூர், சின்னாண்டி மடத்தைச் சேர்ந்தவர் சோலையம்மா, 45. வீட்டருகே உள்ள ஜூஸ் கடையில் துாய்மை பணியாளராக உள்ளார்.நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து, வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். சின்னாண்டி மடம், கார்ப்பரேஷன் பள்ளி அருகே, போதையில் இருந்த ஆசாமி, சோலையம்மாவிடம் வீண் தகராறு செய்துள்ளார்.மேலும், அவரை தகாத வார்த்தைகளால் பேசி, காலால் எட்டி உதைத்துள்ளார். இதில் கீழே விழுந்த சோலையம்மாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொடுங்கையூர் போலீசார் விசாரித்து, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 36, என்பவரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
10-Nov-2024