உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  போலி ஆவணம் கொடுத்து சிம் கார்டு வாங்கியவர் கைது

 போலி ஆவணம் கொடுத்து சிம் கார்டு வாங்கியவர் கைது

எஸ்பிளனேடு: பிராட்வே பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 34; தனியார் மொபைல் போன் கடையின் மேலாளர். நேற்று முன்தினம், பூக்கடை பகுதியில் உள்ள கிளையில் பணியில் இருந்தார். அப்போது, ஓட்டுநர் உரிமத்தை கொடுத்து, இரு 'போஸ்ட்பெய்டு' சிம் கார்டுகளை ஒருவர் கேட்டுள்ளார். அவரது ஓட்டுநர் உரிமத்தை சரிபார்த்தபோது, போலி என்பது தெரிந்தது. எஸ்பிளனேடு போலீசார் வந்து, அந்நபரிடம் நடத்திய விசாரணையில், கர்நாடகா மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த சஞ்சய் வர்மா, 53, என்பதும், போலி ஆவணங்கள் கொடுத்து திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் சிம் கார்டுகளை வாங்கி பணமோசடி செய்ததும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர். இவர் மீது கேரளா மாநில காவல் நிலையங்களில் கள்ள நோட்டு அச்சடித்த வழக்குகளும், சென்னையில் இரு திருட்டு வழக்குகளும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ