உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நிச்சயதார்த்தம் முடிந்த பின் திருமணத்திற்கு மறுத்தவர் கைது

நிச்சயதார்த்தம் முடிந்த பின் திருமணத்திற்கு மறுத்தவர் கைது

பல்லாவரம்,:ஜமீன் பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண், கல்லுாரியில் படித்த போது, ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், 29, என்பவர், 28 வயது பெண்ணை காதலித்துள்ளார்.இவர்களது காதல் விவகாரம் தெரிந்து, இரு வீட்டார் சம்மதத்துடன், 2023 மார்ச் 26ல் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் மூன்று மாதம் கழித்து, திருமணத்தில் விருப்பமில்லை என சதீஷ்குமார் கூறியுள்ளார்.அதிர்ச்சியடைந்த அப்பெண், சதீஷ்குமார் வீட்டிற்கு சென்று இது குறித்து கேட்ட போது, குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.மேலும், காதலித்த போது சதீஷ்குமார் அப்பெண்ணை, பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வீடியோ எடுத்து வைத்திருந்த அவர், சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, 20 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும் தெரிகிறது.இதுகுறித்து அப்பெண்ணின் குடும்பத்தினர், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். இதன்படி, பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி