ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை தந்தவர் கைது
அண்ணா நகர்:நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 42 வயது பெண், அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.அதன் விபரம்:இரு ஆண்டுகளுக்கு முன், சமூக வலைதளமான முகநுால் வாயிலாக, சரவண விக்ரம் என்ற பெயரில் ஒருவரிடம் பேசி பழகினேன்ஆபாச வீடியோக்களை 'வாட்ஸாப்' செயலியில் அனுப்பி, அதேபோல் செய்ய வேண்டும் என, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இதனால் அவரிடம் பேசுதை தவிர்த்து, அவருடைய மொபைல் போன் எண்ணை பிளாக் செய்தேன்.பின், புதிய எண்ணில் இருந்து பேசி, என் மகள்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.போலீசார் விசாரித்து, துாத்துக்குடியைச் சேர்ந்த கோபி, 42, என்பவரை கைது செய்தனர். விசாரணையில், இவர், பல்வேறு சமூக வலைதள பக்கங்களில், பல பெயர்களில், பெண்களிடம் பழகி, பாலியல் தொல்லை கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். இவரது பெயரில், ஐந்து முகநுால் பக்கங்களும், ஒன்பது இன்ஸ்டாகிராம் கணக்கு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.