உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காரில் குட்கா கடத்தியவர் கைது

காரில் குட்கா கடத்தியவர் கைது

வேளச்சேரி வேளச்சேரி 100 அடி சாலையில், நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி போலீசார் வாகன சோதனை செய்தனர். அப்போது அங்கு வந்த ஸ்விப்ட் மாடல் காரை மடக்கி விசாரித்தனர்.அப்போது, காரின் ஓட்டுனர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அதனால் சந்தேகமடைந்த போலீசார், காரை சோதனை செய்தபோது, அதில் 100 கிலோ குட்கா இருந்தது.அவர்களிடம் நடத்திய விசாரணையில், திருப்பத்துாரை சேர்ந்த தங்கராஜ், 40, எனவும், ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டையில் இருந்து குட்கா கடத்தி வருவதும் தெரிந்தது. தங்கராஜை கைது செய்த போலீசார், குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை