உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நர்ஸிடம் போன் பறித்தவர் கைது

நர்ஸிடம் போன் பறித்தவர் கைது

சென்னை, சூளைமேடு, சுப்பாராவ் நகரைச் சேர்ந்தவர் நிஷாந்தி, 25. திருநங்கையான இவர், தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு வேலை முடித்து, காந்தி சாலை வழியாக வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, மர்மநபர் அவரது மொபைல் போனை பறித்து தப்ப முயன்றார். பொதுமக்கள் உதவியுடன் மொபைல் போன் திருடனை மடக்கி பிடித்த நிஷாந்தி, சூளைமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.விசாரணையில், அசோக் நகரைச் சேர்ந்த சுபாஷ், 20, என்பது தெரியவந்தது. நேற்று அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் மீது, ஏற்கனவே மூன்று குற்ற வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை