உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ்சில் டாக்டரின் மனைவியிடம் 18.5 சவரன் திருடியவர் கைது

பஸ்சில் டாக்டரின் மனைவியிடம் 18.5 சவரன் திருடியவர் கைது

படப்பை: அரசு பேருந்தில் பயணித்த டாக்டரின் மனைவியிடம், 18.5 சவரன் நகைகள் திருடிய நபர் கைது செய்யப்பட்டார். மண்ணிவாக்கம், குமரன் நகரைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவர், செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவர். இவரது மனைவி பிரியா, 30; ஆறு மாத கர்ப்பிணி. இவர், தன் 9 வயது மகளுடன், வேலுாரில் உள்ள உறவினர் வீட்டு திருமண விழாவில் பங்கேற்க, கடந்த 30ம் தேதி தாம்பரத்தில் இருந்து வேலுார் செல்லும், தடம் எண்: 155 அரசு பேருந்தில் பயணித்தார். படப்பை அருகே பேருந்து சென்றபோது, பேருந்தில் பயணித்த மர்ம நபர் ஒருவர், சில்லரை நாணயங்களை பிரியா மீது தவறவிட்டார். கோவில் உண்டியலில் அந்த காசுகளை போட வேண்டும். எனவே, எடுத்து தருமாறு அந்த நபர் கூறியுள்ளார். இதையடுத்து பிரியா கீழே குனிந்து சில்லரை நாணயங்களை சேகரித்து, அந்த நபரிடம் கொடுத்தார். இதையடுத்து, அந்த நபர் படப்பை பேருந்து நிலையத்தில் இறங்கி சென்றுவிட்டார். இந்த நிலையில், படப்பை அடுத்த ஒரகடத்தை பேருந்து கடந்து சென்றபோது, தான் எடுத்து வந்திருந்த பை திறந்த நிலையில் இருப்பதையும், அதில் இருந்த 18.5 சவரன் நகைகள் மாயமாகி இருப்பதையும் கண்டு, பிரியா அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பேருந்தில் இருந்து இறங்கி, படப்பை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், நகைகளை திருடியது திருச்சியைச் சேர்ந்த காசி, 30, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், 18.5 சவரன் நகைகளை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ