மேலும் செய்திகள்
ம.நீ.ம., பெண் நிர்வாகி ஆட்டோ ஓட்டுநர் மோதல்
22-Jul-2025
திருமங்கலம், ஆட்டோவை திருடி, சவாரிக்கு சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். மேற்கு அண்ணா நகர், பாடி குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 32; ஆட்டோ ஓட்டுநர். இவரது ஆட்டோவை, அதேபகுதியில் உள்ள தபால் நிலையம் அருகில் நிறுத்துவது வழக்கம். கடந்த 2ம் தேதி இரவு, இவரது ஆட்டோ திருடு போனது தெரிந்தது. இது குறித்து, திருமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் அம்பத்துார் போலீசாரின் வாகன சோதனையில், திருட்டு ஆட்டோ ஒன்று சிக்கியது. விசாரணையில், ஆட்டோவை ஓட்டி வந்தது, அம்பத்துார், கள்ளிப்குப்பத்தைச் சேர்ந்த கார்த்திக், 42, என்பதும், ரமேஷின் ஆட்டோவை திருடி சவாரிக்கு சென்றதும் தெரிய வந்தது. கார்த்திக்கை நேற்று கைது செய்த திருமங்கலம் போலீசார், ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
22-Jul-2025