உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேனில் கடைக்காரர் வைத்த ரூ.ஒரு லட்சம் திருடியவர் கைது

வேனில் கடைக்காரர் வைத்த ரூ.ஒரு லட்சம் திருடியவர் கைது

வில்லிவாக்கம், வில்லிவாக்கம், சிட்கோ நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார், 28. இவர், ரெட்டேரி பகுதியில், சாலையோரத்தில் காய்கறி கடை நடத்தி வருகிறார்.இவர், கடந்த 12ம் தேதி மதியம் காய்கறி வியாபாரம் செய்த ஒரு லட்சம் ரூபாயை, லோடு வேனில் வைத்து வில்லிவாக்கம், சிட்கோ நகர் 1வது பிரதான சாலையில் நிறுத்தினார்.பின், வீட்டிற்கு சென்று இரவு பணத்தை எடுக்க சென்றபோது, வாகனத்தில் இருந்த பணம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரையடுத்து, வில்லிவாக்கம் போலீசார் விசாரித்தனர். இதில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த மதன்ராஜ், 25, என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து, 48,000 ரூபாய் மீட்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ