உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடையில் மாமூல் கேட்டு மிரட்டியவர் கைது

கடையில் மாமூல் கேட்டு மிரட்டியவர் கைது

ஓட்டேரி :ஓட்டேரியைச் சேர்ந்தவர் மனோஜ்குமார், 57; நியூ பேரன்ஸ் சாலையில், 'கண்ணன்' என்ற பெயரில் டிபன் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் மாலை, பீமாராவ் குடியரசு கட்சியின் வடசென்னை மேற்கு மாவட்ட செயலர் கிஷோர்குமார், 28, என்பவர் மது போதையில் சென்று, டிபன் சாப்பிட்டுள்ளார்.பின், மாதம் 5,000 ரூபாய் மாமூல் தர வேண்டும் என, மனோஜ்குமாரை மிரட்டியுள்ளார். தராவிட்டால் கொலை செய்து விடுவேன் எனவும் கூறியுள்ளார்.இதுகுறித்து, ஓட்டேரி போலீசில் மனோஜ்குமார் புகார் அளித்ததை அடுத்து, வழக்கு பதிந்த போலீசார், கிஷோர்குமாரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ