மேலும் செய்திகள்
ரூ.ஒரு கோடி நிலமோசடி பம்மதுக்குளம் நபர்கள் கைது
25-May-2025
ஆவடி, மதுரவாயல், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் புவனேந்திரன், 49. இவர், கடந்த 2007ல், மோரை கிராமம், அய்யப்பா நகரில் 1,080 சதுர அடி நிலத்தை, கோவிந்தராஜ் என்பவரிடம் இருந்து பெற்று அனுபவித்து வந்துள்ளார்.இந்நிலையில், மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் மற்றும் அவரது மகன் சுனில் ஆகியோர், புவனேந்திரன் நிலத்தில் அத்துமீறி நுழைந்து தகராறில் ஈடுபட்டனர்.புவனேந்திரன், அவர்கள் குறித்து விசாரித்தபோது, சுனிலின் தாத்தா பெயரும், புவனேந்திரன் வாங்கிய நிலத்தின் முந்தைய உரிமையாளர் பெயரும் முனுசாமி நாயுடு என தெரிந்தது.இந்த தகவலை தெரிந்து கொண்ட தீனதயாளன், முனுசாமி நாயுடு பெயரில் போலியான இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பெற்று, தன் மகன் சுனில் என்பவருக்கு தான செட்டில்மென்ட் எழுதி கொடுத்தது தெரிய வந்தது. மோசடி செய்த நிலத்தின் மதிப்பு 17 லட்சம் ரூபாய்.இது குறித்து புவனேந்திரன், கடந்தாண்டு அக்., 10ம் தேதி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தார். புகாரை விசாரித்த இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த மீஞ்சூர், பெரிய சீமாவரம் பகுதியைச் சேர்ந்த சுனில், 34, என்பவரை, நேற்று கைது செய்தனர்.
25-May-2025