உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லாரி ரிவர்ஸ் எடுக்க உதவியர் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

லாரி ரிவர்ஸ் எடுக்க உதவியர் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

குன்றத்துார்: டேங்கர் லாரி 'ரிவர்ஸ்' எடுக்க உதவியர், சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 46; கட்டட தொழிலாளி. இவர், குன்றத்துார் அருகே சிறுகளத்துாரில் தங்கி, அதே பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார். கட்டுமான பணித்தளத்தில், நேற்று மதியம் தண்ணீர் நிரம்பிக்கொண்டு வந்த டேங்கர் லாரி, 'ரிவர்ஸ்' எடுப்பதற்காக, பின்னால் இருந்து ஏழுமலை உதவியுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரி ஓட்டுநரான தங்கராஜ், 40, என்பவரை, குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !