மேலும் செய்திகள்
பைக் திருட்டு 4 சிறுவர்கள் கைது
24-May-2025
சென்னை:மதுரை மாவட்டம், அரசரடி பகுதியைச் சேர்ந்தவர் சுபதினேஷ், 38. இவர், சில தினங்களுக்கு முன் வேலை நிமித்தமாக, சென்னை வானகரம் வந்துள்ளார்.சொந்த ஊருக்குச் செல்ல, நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்பகுதியில் உள்ள, மதுபான கடை ஒன்றுக்கு சென்றும் திரும்பி உள்ளார்.அப்போது இவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் நைசாக பேச்சு கொடுத்தனர். அவர்கள், சுபதினேஷை, மதுரைக்கு செல்ல பேருந்து ஏற்றி விடுவதாக, இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்று, கடுமையாக தாக்கி 1,700 ரூபாய் மற்றும் மொபைல் போனை பறித்து தப்பி உள்ளனர். இது குறித்து, கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.
24-May-2025