உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  போதையில் பீர் பாட்டில் குத்து மே.வங்க நபருக்கு 32 தையல்

 போதையில் பீர் பாட்டில் குத்து மே.வங்க நபருக்கு 32 தையல்

சென்னை: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ராம் தமாங், 30. இவர் ஆலந்துார், மார்க்கோஸ் தெருவில் தங்கி, ஜி.எஸ்.டி., சாலையில் உள்ள 'தலப்பாகட்டி' பிரியாணி கடையில் பணிபுரிகிறார். இவரது உறவினர் சாகர் தமாங், 25. இவரும் அதே கடையில் பணிபுரிகிறார். இருவரும், நேற்று முன்தினம் தங்கியிருந்த அறையில் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறு அடிதடியாக மாறியது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சாகர் தமாங், பீர் பாட்டிலால் ராம் தமாங்கை தாக்கி, உடலின் பல்வேறு இடங்களில் குத்தி கிழித்துள்ளார். இதில், பலத்த காயமடைந்த ராம் தமாங்கை, அருகில் இருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உடலில், 32 தையல்கள் போடப்பட்டது. பரங்கிமலை போலீசார், சாகர் தமாங்கை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ