உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.46 லட்சம் சோசடி செய்தவருக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை

ரூ.46 லட்சம் சோசடி செய்தவருக்கு இரு ஆண்டுகள் சிறை தண்டனை

பூந்தமல்லி, திருவள்ளூர் மாவட்டம், சோழவரத்தைச் சேர்ந்த நரேந்திரகுமார், தனக்கு சொந்தமான வீட்டு மனைகளை விற்பதாக, செங்குன்றத்தைச் சேர்ந்த ராமநாதன் என்பவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாயை, 2022ல் பெற்றார். ஆனால் நரேந்திரகுமார், வீட்டு மனையை ராமநாதன் பெயரில் பத்திரப்பதிவு தராமல் காலம் தாழ்த்தியுள்ளார். இதனால் ராமநாதன், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.முதலில் 4 லட்சம் ரூபாய் மட்டும் திருப்பி கொடுத்த நரேந்திரகுமார், 46 லட்சம் ரூபாய்க்கு காசோலைகளை கொடுத்துள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பிவிட்டது.இது குறித்து ராமநாதன், சோழவரம் போலீசில் புகார் அளித்தார். நம்பிக்கை மோசடி செய்ததாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நரேந்திரகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு, பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் நடந்து வந்தது.நேற்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நரேந்திரகுமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து, மாஜிஸ்திரேட் தீர்ப்பு வழங்கினார். நரேந்திரகுமார் சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ