உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.1.06 கோடி மோசடி தேடப்படும் நபர் கைது

ரூ.1.06 கோடி மோசடி தேடப்படும் நபர் கைது

ஆவடி, கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சரவணன், 44; ஆட்டோமொபைல் துறையில் பணிபுரிகிறார். இவர், ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2022ம் ஆண்டு, ஆட்டோமொபைல் குறித்த ஆலோசனை கூட்டத்தின்போது, ஸ்ரீதரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நான் கண்டுபிடித்த இயந்திரத்தை பற்றி தெரிந்து கொண்டு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஷோரூம் துவக்கி தொழில் புரிய வேண்டும் என, என்னை வற்புறுத்தினார்.தொழில் துவங்க ஒரு கோடி ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் எனக் கூறினார். அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு, அக்., மாதம் முதல் 2023 ஜனவரி மாதம் வரை, வங்கி பணப்பரிவர்த்தனை வாயிலாக, 78.32 லட்சம், நேரடியாக 27.75 லட்சம் என, மொத்தமாக 1.06 கோடி ரூபாய் கொடுத்தேன்.பல மாதங்களாகியும் ஷோரூமை துவக்காமல் ஏமாற்றினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்நிலையில், திருச்சியில் தலைமறைவாக இருந்த ஸ்ரீதரனை கைது செய்து சென்னை அழைத்து வந்து விசாரித்தனர்.அதில், ஸ்ரீதரன் மீது பெங்களூரு மற்றும் ஆந்திராவில், மோசடி வழக்குகள் உள்ளதாகவும், திருச்சியில் கடந்த சில மாதங்களாக தங்கி இருந்து, போலி நிறுவனத்தை துவக்கி, பல பேரிடம், பல லட்சம் மோசடி செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது. பின், போலீசார், ஸ்ரீதரனைநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி