மேலும் செய்திகள்
மொபைல் போன் பறித்தவர் கைது
19-Apr-2025
சென்னை:மயிலாப்பூர், சாரதாபுரத்தைச் சேர்ந்தவர் பியூலா, 34. இவர், மயிலாப்பூர் டி.சில்வா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார். கடந்த 15ம் தேதி காலை பக்தவச்சலம் சாலையில், மொபைல் போனில் பேசியபடி நடந்து சென்றார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர், அவரது மொபைல் போனை பறித்துச் சென்றார்.வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் போலீசார், மொபைல் பறிப்பில் ஈடுபட்ட ராயப்பேட்டை, டாக்டர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த சரத்குமார், 25, என்பவரை கைது செய்தனர். மொபைல் போன் மற்றும் திருட்டுக்கு உபயோகப்படுத்திய 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
19-Apr-2025