உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மறுவாழ்வு மையம் சென்றவர் மறுநாளே பலி

போதை மறுவாழ்வு மையம் சென்றவர் மறுநாளே பலி

வானகரம், :போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல், தெள்ளியார் அகரம் பகுதியைச் சேர்ந்தவர் சர்மா, 47. இவர், அரசு வருவாய்த்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.மதுப்பழக்கத்திற்கு அடிமையான சர்மா, அடிக்கடி வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர், வானகரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் இரு தினங்களுக்கு முன், சிகிச்சைக்காக சர்மாவை சேர்த்தனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறி சர்மாவை, போதை மறுவாழ்வு மைய ஊழியர்கள், போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.மருத்துவர்களின் பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இதையடுத்து, சர்மாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட மறுநாளே, சர்மா உயிரிழந்தது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது எனக்கூறி, வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை முடிவு வந்தபிறகே, அவரது இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை