உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிள்ளைகளை அழைத்துவர சென்றவர் வெட்டி கொலை

பிள்ளைகளை அழைத்துவர சென்றவர் வெட்டி கொலை

திருவேற்காடுபள்ளியில் படிக்கும் பிள்ளைகளை அழைத்து வர சென்ற நபர், பட்டப்பகலில் சாலையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருவேற்காடு, சுந்தரசோழபுரம், டி.டி.எஸ்., சாலை பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார், 50. இவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி விஜயகுமாரி, 45. தம்பதிக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். கோலடி அருகே பருத்திப்பட்டு சாலையில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை அழைத்து வர, நேற்று மாலை ஆட்டோவில் சென்றுள்ளார். அந்நேரம், இயற்கை உபாதைக்காக, கோலடி மயானம் அருகே ஆட்டோவில் இருந்து இறங்கி நடந்து சென்றுள்ளார். அப்போது, அவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த இருவர், கத்தியால் சிவகுமாரின் தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த சிவகுமார், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பட்டப்பகலில், பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள சாலையில் நடந்த இச்சம்பவத்தால், பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற திருவேற்காடு போலீசார், சிவகுமாரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர். சிவகுமாருக்கு இருசக்கர வாகனம் ஓட்ட தெரியாததால், பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளை தினமும் வீட்டிற்கு ஆட்டோவில் அழைத்து வருவார் எனக் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம், தொழில் போட்டியா அல்லது கொடுக்கல் - வாங்கலில் பிரச்னையா என போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ