உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முன்கூட்டியே துவங்கியது மாம்பழ சீசன் கர்நாடகா அல்போன்சா கிலோ ரூ.130

முன்கூட்டியே துவங்கியது மாம்பழ சீசன் கர்நாடகா அல்போன்சா கிலோ ரூ.130

சென்னை, முன்கூட்டியே சீசன் துவங்கியுள்ள நிலையில், 'அல்போன்சா' ரக மாம்பழ வரத்து, சென்னைக்கு வந்துள்ளது.ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, பீஹார், குஜராத், மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, உ.பி., - ம.பி., ஆகிய மாநிலங்களில் மாமரங்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.இங்கு, அல்போன்சா, இமாம்பசந்த், பங்கனபள்ளி, தோத்தாபுரி, ஜவாரி, செந்துாரா, நீலம், காலாப்பாடி, பெங்களூரா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட மாம்பழ ரகங்கள் விளைகின்றன.தமிழகத்தில், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூர், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில், அதிகளவில் மாம்பழங்கள் விளைகின்றன.நாட்டில், கோடை காலமான மே மாதத்தில் மாம்பழங்கள் அறுவடை துவங்கும். தற்போது மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், முன்கூட்டியே மாம்பழம் சீசன் துவங்கியுள்ளது.இதன் எதிரொலியாக அல்போன்சா ரக மாம்பழங்கள் வரத்து, சென்னை கோயம்பேடு சந்தைக்கு துவங்கியுள்ளது. கிலோ 130 முதல் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இது மட்டுமின்றி, 5 கிலோ எடை அட்டை பெட்டியில் அடைத்து, 600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில், இம்மாத இறுதியில் மாம்பழ அறுவடை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி