உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விற்பனையின்றி தேக்கம் குப்பையில் மாம்பழங்கள்

விற்பனையின்றி தேக்கம் குப்பையில் மாம்பழங்கள்

கோயம்பேடு, நடப்பாண்டில் வரத்து மற்றும் விளைச்சல் அதிகரிப்பால், மாம்பழ சீசன் களைகட்டி வருகிறது. அதேபோல, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரத்து அதிகம் இருந்தது. இந்த மாதத்துடன் சீசன் முடிகிறது.தற்போது, ருமானி, நீலம் உள்ளிட்ட மாம்பழங்கள் மொத்த விற்பனையில் கிலோ 25 ரூபாய்க்கும், பங்கனப்பள்ளி கிலோ 45 - 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.ஜூஸ் தேவைக்கு பயன்படுத்தும் பெங்களூரா வகை மாம்பழங்கள், கிலோ 10 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெளிநாடுகளுக்கு மாம்பழம் ஏற்றுமதி குறைந்து விட்டது.விலை சரிந்தும், விற்பனையின்றி மாம்பழங்கள் தேங்குவதால், குப்பையில் கொட்டப்படுகிறது. இதுகுறித்து, சென்னை பழ கமிஷன் ஏஜன்ட் சங்கம் பொருளாளர் ஏ.எஸ்., கணேஷ்பாபு, 55, என்பவர் கூறுகையில், ''சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் வரத்து குறைந்துள்ளது. தற்போது 20 டன் மாம்பழங்கள் மட்டுமே விற்பனைக்கு வருகின்றன.''இவற்றில் ஜூஸ் தேவைக்கு பயன்படுத்தும் பெங்களூரா வகை மாம்பழங்கள் மட்டுமே, விற்பனையின்றி தேங்கி வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை