உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்தடையால் துாக்கம் தொலைத்த மாணிக்கம் நகர் மக்கள்

மின்தடையால் துாக்கம் தொலைத்த மாணிக்கம் நகர் மக்கள்

திருவொற்றியூர்: இரவு முழுதும் மின்தடையால், மாணிக்கம் நகர் மக்கள் துாக்கமின்றி தவிர்த்தனர். திருவொற்றியூர் – மாணிக்கம் நகரில், 500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 1,500 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு, 10:15 மணிக்கு, இந்த நகரின் ஒரு பகுதி முழுதும் திடீர் மின்தடை ஏற்பட்டது. அரை மணி நேரம் கழித்து சீரான மின் வினியோகம், மீண்டும், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடையானது. இதனால், அப்பகுதி மக்கள் துாக்கமின்றி தவித்தனர். தொடர்ந்து, நேற்று காலை, 11:00 க்கும் மீண்டும் தடைப்பட்ட மின்சாரம், மதியம் சீரானது. மாணிக்கம் நகரில் தரையின் கீழ் புதைக்கப்பட்ட மின்வயர் பழுது காரணமாகவே, மின்சாரம் தடைப்பட்டதாக கூறப்படுகிறது. * ஆவடி காமராஜர் நகர் பகுதிகளுக்கு ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. காமராஜ் நகர் மின்னுாட்டி மற்றும் ஜம்பர் பழுது காரணமாக நேற்று முன்தினம் இரவு 10:40 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டது. இதனால், காமராஜர் நகர், பருத்திப்பட்டு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, வசந்தம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. 11:55 மணியளவில் பழுது சரி செய்யப்பட்டு மின் விநியோகம் சீரானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி